அலங்காநல்லூரையே அதிர வைத்து.!வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த காளைகள்…சிறந்த காளைகளாக தேர்வு..!

Default Image
  • அலங்காநல்லூரில் மிரட்டிய குலமங்கலம் மார்நாடு காளை 12 மதிப்பெண் பெற்று முதலிடம்-ராவணனன் 10 மதிப்பெண் பெற்று 2 இடம்
  • ஜி.ஆர் கார்த்திக் காளை 9.60 மதிப்பெண் பெற்று 3ம் இடம் 

 

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 8 மணிக்கு பதில் காலை 7 மணிக்கே தொடங்குகிறது .ஜல்லிக்கட்டில்  700 காளைகள் 926  மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கியது.றுதிமொழியை ஆட்சியர் வாசிக்க மாடுபிடி வீர்கள் உறுமொழி ஏற்புடன் ஜல்லிக்கட்டு தொடங்கியது.அமைச்சர் ஆர்பி உதயகுமார், ஆட்சியர் வினய் மற்றும் கண்கானிப்பு குழுவின் ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் ஆகியோர் இந்த போட்டியை துவக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Image

முதலில் கோவில் காளைகள் விழ்த்துவிடப்பட்டன.அதனைத் தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்தது காளைகள் அதனை அடக்க வீரர்கள் ஆர்வம் காட்டி பிடித்தனர்.காளைகளும் காளையர்களும் சரி நிகராக விளையாடி வருந்த நிலையில் 35 பேர் காயமடையந்தனர்.இருவர் மாடு முட்டியதால் உயிரிழந்துள்ளனர்.

மாலை 4 மணிக்கு முடிய வேண்டிய ஜல்லிக்கட்டு 5 மணிவரை நீட்டிக்கப்பட்டது அவ்வாறு நீட்டிக்கட்டு விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வந்த நிலையில் தற்போது நிறைவடைந்து உள்ளது.இந்த போட்டியில் மொத்தம் பதிவு செய்யப்பட்டவர்களில் 660 காளைகள் மற்றும் 695 மாடுபிடி வீரர்கள் மட்டுமே தற்போது வரை வாய்ப்பு அளிக்கப்பட்டு பங்கேற்று விளையாடி உள்ளனர்.

இந்நிலையில் உலகப்புகழ்பெற்ற அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிப்பெறும் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் காளைகளுக்கு கார் சிறப்பு பரிசு வழங்கப்பட்டும் என்று தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது அதன்படி 19 காளைகளை அடக்கிய அலங்காநல்லூரை சேர்ந்த ரஞ்சித் குமாருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது அடுத்ததாக  14 காளைகளை தழுவிய கார்த்திக் 2வது பரிசையும், 13 காளைகளை தழுவிய கணேசன் 3வது பரிசை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

அதே போல் வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த சிறந்த பிடிபடாத மாடுகளாகமதுரை குலமங்கலம் மார்நாடு காளை 12 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்து அசத்தியது.

Image

அதே போல் அனைவரின் கவனத்தை பெற்ற புதுக்கோட்டை ஆய்வாளர் அனுராதாவின் ராவணன் காளை 10 மதிப்பெண் பெற்று இரண்டாவது இடத்தையும் , மதுரை ஜி.ஆர் கார்த்திக் காளை 9.60 மதிப்பெண் பெற்று 3ம் இடம் பிடித்து அசத்தி உள்ளது.வெற்றிப் பெற்ற காளைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Gnanasekaran Anna University
atlee and loki
Tamilnadu CM MK Stalin - VCK Leader Thirumavalavan
ind vs aus border gavaskar trophy
sleeping position (1)
Erumbeeswarar (1)