அலங்காநல்லூரே அதிருதப்பா……அசத்தல் ஜல்லிக்கட்டு நீட்டிப்பு..!
- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு
- அமைச்சர்கள் மற்றும் அனைவரது வேண்டுகோளை ஏற்று 5 மணி வரை நீட்டிக்கப்பட்டது.
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 8 மணிக்கு பதில் காலை 7 மணிக்கே தொடங்குகிறது .ஜல்லிக்கட்டில் 700 காளைகள் 926 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கியது.விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் சுவாரஸ்சியம் நிறைந்த காளைகள் தங்களது ஆட்டத்தை காண்பித்து மிரட்டியது.இந்நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இதுவரை மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள் உள்பட 34 பேர் காயம் அடைந்துள்ளனர்.2 உயிரிழந்து உள்ளனர். மாலை 4 மணிக்கு இந்த ஜல்லிக்கட்டு முடிவடைவது வழக்கம் ஆனால் தற்போது போட்டியில் பதிவு செய்யப்பட்ட காளைகள் இன்னும் முழுமையாக அவிழ்த்து விடப்படமால் 50 மாடுகள் உள்ளதால் அமைச்சர்கள் மற்றும் அனைவரது வேண்டுகோளை ஏற்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.இதன் படி மாலை 5 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது