குடியுரிமை சட்டத்திற்க்கு எதிராக சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம்… அதிரடி காட்டிய அரிமந்திர் சிங்..ஆடிப்போன மத்திய அரசு..
- இந்திய பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட குடியுரிமை திருத்தச்சட்டம், நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களுடன் மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டி வந்தனர்.
- இந்த சட்டத்திற்க்கு எதிராக சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம்.
இந்த போராட்டங்களால் நாட்டில் அமைதியின்மையும் ஏற்பட்டது. இந்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் பஞ்சாப் மாநிலத்திலும் நடைபெற்று வந்தது.ஆனால் அந்த போராட்டங்கள்அமைதியாக நடைபெற்றது இந்நிலையில், மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப் மாநில சட்டசபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில், நமது சமூகம் அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கியது. குடியுரிமை திருத்தச்சட்டம் நாட்டின் சமத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டிய ஒரு சுதந்திரமான மற்றும் நியாயமான ஜனநாயகத்தை இது எதிர்க்கிறது என்றும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு பின்னால் உள்ள சித்தாந்தம் இயல்பாகவே பாரபட்சமானது மற்றும் இது ஒரு மனிதாபிமான நடவடிக்கையாக தெரியவில்லை என்றும்,இது, நமது அரசியலமைப்பின் அடிப்படை சித்தாந்தமான இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மைக்கான அடையாளத்தை குடியுரிமை திருத்த சட்டம் மீறுகிறது என்பது மிகத்தெளிவாக தெளிவாகிறது என்றும், எனவே குடியுரிமை வழங்குவதில் மதத்தின் அடிப்படையில் எந்தவொரு பாகுபாட்டும் காட்டக்கூடாது என்றும் , இந்தியாவில் உள்ள அனைத்து மதக் குழுக்களுக்கும் சட்டம் அனைவருக்கும் அளிக்கும் சமத்துவத்தை உறுதி செய்யவும், இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யுமாறு இந்திய அரசை வலியுறுத்துவதற்க்காக இந்த சபை இந்த தீர்மானம் மூலம் வலியுறுத்துகிறது என அதில் கூறப்பட்டு உள்ளது. கேரளாவிற்க்கு அடுத்ததாக பஞ்சாப் மாநிலமும் இந்த குடியுரிமை சட்டத்திற்க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.