நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் தூக்கில் தொங்குவது உறுதியானது.. கருணை மனுவை நிராகரித்தார் குடியரசு தலைவர்..
- நிர்பயா வழக்கில் டெல்லி நீதிமன்றம் பிறப்பித்த தூக்கு உறுதி.
- கருணை மனுவை நிராகரித்தார் குடியரசு தலைவர்.
கடந்த 2012 ம் ஆண்டு தலைநகர் டெல்லியில் மருத்துவ மாணவியை 6 பேர் கொண்ட கும்பலால் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவன் சிறுவன் என்பதால் 2 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், மற்றொரு குற்றவாளியான ராமன் சிங் என்பவன் தில்லி திகார் சிறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். ஏனைய 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து டில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் இந்த தூக்கு தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் டில்லி உயர் நீதிமன்ரம் மற்றும் உச்சநீதிமன்றத்திலும் பலமுறை சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டும், அவைகள் அனைத்தும் நீதிமன்ரங்களால் நிராகரிக்கப்பட்டன. இந்நிலையில் இந்த குற்றவாளிகளுக்கு வரும் ஜனவரி 22 புதன் கிழமை காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என டெல்லி நீதிமன்ரம் உத்தரவிட்டது. இதற்கான ஏற்பாடுகளை திகார் சிறை நிர்வாகம் மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில் இந்த தூக்கு தண்டனையை எதிர்த்து குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் சிங் என்பவன் டில்லி அரசுக்கு கருணை மனு அளித்தான். இதனால் கருணை மனு மீது முடிவு எடுக்கும் வரை தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க டெல்லி நீதிமன்றம் ஜனவரி 16ம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த கருணை மனுவை நிராகரிப்பதாக அறிவித்த டெல்லி துனைநிலை ஆளுநர், அந்த மனுவை அப்படியே மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தது. இந்த மனு நேற்று இரவு இந்திய குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்த உள்துறை அமைச்சகம், இந்த கருணை மனுவை நிராகரிக்கவும் குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்தது.
இந்த உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று, இந்த கருணை மனுவை நிராகரிப்பதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். இதனால் டெல்லி நீதிமன்றத்தின் உத்தரவுபடி வரும் ஜனவரி 22 புதன் கிழமை அன்று குற்றவாளிகள் 4 பேரும் தூக்கில் போடப்படுவது உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் இந்த தூக்கு தண்டனை இனி தவறு செய்பவர்களை சிந்திக்க வைக்க வேண்டும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.