எமனுக்கே எண்டு கார்டு போட்ட சிறுமி.. 18 மணி நேரம் பனியில் சிக்கிய சிறுமி உயிருடன் மீட்பு.. ஆச்சரியத்தில் அனைவரும்..

Default Image
  • பல மணி நேரம் பனியில் சிக்கிய சிறுமி உயிருடன் மீட்பு.
  • அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அதிசயம்.

இந்தியாவின் காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ளது. இந்த  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் நீலம் பள்ளத்தாக்கு பகுதியில் ஷனாஸ் தனது  குடும்பத்தினருடன் 3 அடுக்கு மாடியில் வசித்து வந்தார். இந்நிலையில்  கடந்த செவ்வாய் கிழமை இந்த கட்டிடம் பனிச்சரிவில் சிக்கி  பனியில் புதைந்தது. இந்த பனிச்சரிவில்  ஷனாசின் ஒரு மகனும், ஒரு மகளும் பனியில் புதைந்து உயிரிழந்தனர். இந்நிலையில்  மீட்பு படையினர்  நடத்திய  மீட்பு பணியில், 18 மணி நேரத்துக்குப் பின்னர் ஷனாசின் மற்றொரு மகலான  சமினாவை (12) மீட்பு படையினர் உயிருடன் மீட்டுள்ளனர்.

Image result for samina in snowfall

இந்த பனிச்சரிவில் சிக்கிய அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. இதனையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சைக்கு பின்  அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  இதுவரை இந்த பனிச்சரிவு  விபத்துகளில் சிக்கி  இதுவரை 114 பேர் உயிரிழந்துள்ளனர். நீலம் பள்ளத்தாக்கில் 100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் பனிச்சரிவினால் சேதமடைந்துள்ளது. இதுவரை  76 பேர் உயிர் இழந்துள்ளனர்.இந்த தகவல் அனைவரையும் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பக்கம் மக்களின் கவனத்தை திருப்பியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்