வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது ஜிசாட்-30.. அடுத்தடுத்த சாதனையால் உலகமே உற்றுநோக்கும் தரமான சம்பவம்..
- விண்வெளி துறையில் உலக நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் முன்னிலை அடைந்து வருகிறது.
- தகவல் தொடர்பு சேவைகளுக்காக இன்று ஒரு செயற்கை கோள் விண்ணில் ஏவப்பட்டது.
இதில் ஒன்றாக, இன்று காலை ஜனவரி 17 துள்ளியமாக கூறினால் அதிகாலை இந்தியாவின் தொலைதொடர்பு மற்றும் ஒளிபரப்பு சேவைகளுக்கான, ‘ஜிசாட் – 30’ என்ற செயற்கைக்கோள், வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கை கோள் தென் அமெரிக்காவின் பிரென்ச் கயானாவின் கோரோ பகுதியில் உள்ள ஏரியன் விண்வெளி தளத்திலிருந்து ‘ஜிசாட் – 30’ மற்றும் இடுல்சாட் என்ற விண்வெளி நிறுவனத்தின், ‘இடுல்சாட் கோனக்ட்’ செயற்கைக் கோள்களுடன், ஏரியன் – 5′ என்ற ராக்கெட், சரியாக இன்று அதிகாலை 2.35 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இதில், 3,357 கிலோ எடையில் அனுப்பப்பட்ட ஜிசாட் – 30 எனற செயற்கைக்கோள், தொலைதொடர்பு, வீடு தேடி வரும் தொலைகாட்சி ஒளிபரப்புக்கான ‘டி.டி.எச்., விசாட்’ மற்றும், ‘டிஜிட்டல்’ சேவைகளுக்கு பயன்படும். . இதன், ‘கியூ பேண்டு’ டிரான்ஸ்பாண்டர், இந்தியா மற்றும் சுற்றியுள்ள தீவுகளுக்கும், ‘சி பேண்டு’ டிரான்ஸ்பாண்டர், வளைகுடா நாடுகள், ஏராளமான ஆசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலிய நாட்டின் தொலைதொடர்பு சேவைகளுக்கு இந்த செயற்கை கோள் துணைபுரியும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. இந்த ஜிசாட்-30 செயற்கைக்கோள், 15 ஆண்டுகள் இயங்கும் வகையில் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த துள்ளியமான தொழில்நுட்பம் மிகுந்த பலனை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது