சத்துணவுக்கும் இனி பயோ மெட்ரிக்… சாட்டையை சுழற்றும் சமூக நலத்துறை.. தமிழக அரசின் அடுத்தடுத்த அதிரடிகள்…

Default Image
  • அரசு பள்ளி மாணவர்களுக்கு முறையாக சத்துணவு கிடைப்பதை உறுதி செய்ய பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறையை அமல்படுத்த சமூகநலத் துறை அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.
  • அதிரடி திட்டங்களால் புதுப்பொழிவு பெறப்போகும் அரசு பள்ளிகள்..

தமிழகம் முழுவதும் மொத்தம்  49,554 சத்துணவு மையங்கள் மூலம் தினமும் 49 லட்சத்துக்கும் மேற் பட்ட மாணவ, மாணவியர்கள் பசியாறி  பயன் அடைந்து வருகின்றனர். இவர்களுக்கு மதிய நேரங்களில் வழங்கப்படும் சத்துணவுகள் சரியாக மாணவர்களுக்கு சென்று சேருகிறதா என்பதை கண்டறிய தலைமை ஆசிரியர்கள் மூலம் தினமும் எத்தனை மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பது கணக்கெடுக்கப்பட்டு வந்தது. எனினும் சத்துணவின் பயன் முழுமையாக மாணவர்களுக்கு சென்று சேருவதை அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை.

 

Related image

எனவே,  பயோமெட்ரிக் முறையை அமல்படுத்த சமூக நலத்துறை அதிகாரிகள் தற்போது  முடிவு செய்துள்ளனர். முதலில் சோதனை அடிப்படையில் சென்னையில் 10 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு அங்கு  சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் பயோமெட்ரிக் முறையில் கைரேகையை பதிவு செய்து விட்டு பின் சத்துணவை பெற்றுச் செல்லலாம் என்றும்,  புதிதாக மதிய உணவு சாப்பிட வரும் மாணவர்களுக்கும் உணவு வழங்கப்படும். யாருக்கும் இதை காரணம் காட்டி உணவு மறுக்கப்படாது. இதற்கான வரவேற்பை பொறுத்து தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

 

 

Related image

இந்த திட்டம் அனைத்து மாவட்டத்திலும் நிறைவேறினால் மாணவர்கள் பெரிதும் பயனடைவார்கள் என பொதுமக்கள் கருதுகின்றனர். இதே போல் மதிய உணவின் தரம் மிகவும் மோசமாக உள்ளதாக மாணவர்கள் தரப்பிலும் அவர்கள் பெற்றோர் தரப்பிலும் குற்றச்சாட்டு உள்ல நிலையில் அரசு கொடுக்கும் நிதியை சத்துணவு பொறுப்பாளர்கள் சரியாக தான் பயன்படுத்துகிறார்கள் என்பதை சமூக நலத்துறை உறுதிசெய்து கொள்ளவேண்டும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்