தமிழகத்தில் இந்த ஆண்டின் கட்டாய தேவை இது தான் – கவிஞர் வைரமுத்து
- தமிழ்நாட்டில் இருந்து மதுவை சுத்தமாக முடித்து விடலாம்.
- தமிழகத்தின் இந்த ஆண்டின் கட்டாய தேவை மதுவிலக்கு தான்.
கவிஞர் வைரமுத்து பிரபலமான தமிழ் திரைப்பட பாடலாசிரியர் ஆவார். இவர் பல்லாயிர கணக்கான பாடல்களை எழுதிய நிலையில், இவர் எழுதிய பாடலுக்கு பல விருதுகளும் கிடைத்துள்ளது. இவர் தன்னுடைய பணியில் மட்டுமல்லாது, சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டவராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், ‘தமிழ்நாட்டில் இருந்து மதுவை சுத்தமாக முடித்து விடலாம் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தின் இந்த ஆண்டின் கட்டாய தேவை மதுவிலக்கு தான் என்றும், தமிழ்நாட்டையும், சமூகத்தையும் மாசுபடுத்தும் நஞ்சு என்று தான் மதுவை சொல்ல வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.