ஆயிரம் கோடி செலவில் அம்பேத்கருக்கு சிலை அமைக்க முடிவு.. 450 அடி உயரத்திற்க்கு அமைகிறது அண்ணலின் சிலை..

Default Image
  • இந்திய அரசியலமைப்பின் சிற்பி அண்ணல் அம்பேத்கருக்கு பிரமாண்ட சிலை.
  • பல கோடி செலவில் அமைக்கிறது மகாராஷ்டிர அரசு.

மகாராஷ்டிர மாநிலத்தில்  350 அடி உயரத்தில் தற்கால மனு, அரசியலமைப்பின் சிற்பி அம்பேத்கருக்கு வெண்கலச் சிலை அமைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அம்மாநில  துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். இந்த சிலையானது தாதர் பகுதியிலுள்ள இந்து மில்ஸின் 12 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்படவுள்ளது. இந்த அம்பேத்காரின் சிலையானது  250 அடி உயரத்தில்  அமைக்கலாம் என பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அது தற்போது 350 அடியாக அதிகரிக்க  முடிவு செய்யப்பட்டுள்ளது.

Image result for ambedkar statue

அத்துடன், இந்த சிலையின்  கீழ் பகுதியில் 100 அடிக்கு அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு நினைவகம் உள்ளிட்டவையும்  அமைக்கப்படவுள்ளது, எனவே, இந்த அம்பேத்கர் சிலையின் மொத்த உயரம் 450 அடி வரை இருக்கும். இந்த சிலை கட்டி முடிக்க 2 வருடங்கள்  ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில், ரூ.763 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில்,தற்போது  இதன் மதிப்பீடு தற்போது ரூ. 1,069.95 கோடியாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்