காவி உடை அணிந்த புகைப்படத்துடன் தமிழக பாஜக..!சர்ச்சையான திருவள்ளுவர் தின வாழ்த்து
- கொண்டாடப்படும் வான்புகழ் கொண்ட வள்ளுவனின் திருவள்ளுவர் தினம்
- காவி உடை அணிந்த திருவள்ளுவரின் புகைப்படத்தை வெளியிட்டு பாஜக திருவள்ளுவர் தின வாழ்த்து.
திருவள்ளுவர் தினம் வாழ்த்து குறித்து தமிழக பாஜக தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்ட வாழ்த்து செய்தி சர்ச்சையாகி உள்ளது.அதன்படி தமிழக பாஜக வெளியிட்ட அந்த பதிவில் அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள் ! – ஒளவையார் கடுகை விட சிறியது அணு, அதன் நடுவே துளை போட்டு அத்துளையினுள் ஏழு கடல்களின் நீரையும் புகுத்திக் குறுகிய பின் எவ்வாறிருக்குமோ அது போலாம் திருக்குறள்.
அத்தகைய குறள் படைத்த திருவள்ளுவ பெருமானை வாழ்த்தி வணங்குவோம் என்று காவி உடையில் தோற்ற மளிக்கும் திருவள்ளுவரின் புகைப்படத்தினை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்தது.இதே போல் காவி உடை தோற்றத்தில் திருவள்ளுவரின் புகைப்படத்தை வெளியிட்டு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தன் ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் தின வாழ்த்து தெரிவித்தார் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பவே காவி தோற்றமளித்த படம் நீக்கப்பட்டு தமிழக அரசால் வெளியிட்ட திருவள்ளுவரின் புகைப்படத்துடன் மீண்டும் வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில் தான் காவி தோற்றத்துடன் கூடிய வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் பதிவை ஷேர் செய்தது தமிழக பாஜக இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்படவே தமிழக பாஜகவும் வெங்கையா நாயுடு ட்வீட்டை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள் ! – ஒளவையார்
கடுகை விட சிறியது அணு, அதன் நடுவே துளை போட்டு அத்துளையினுள் ஏழு கடல்களின் நீரையும் புகுத்திக் குறுகிய பின் எவ்வாறிருக்குமோ அது போலாம் திருக்குறள்.
அத்தகைய குறள் படைத்த திருவள்ளுவ பெருமானை வாழ்த்தி வணங்குவோம். pic.twitter.com/T21SeB8Ffh
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) January 16, 2020