சரக்கு ரயில் மோதியதில் பயணிகள் ரயில் தடம் புரண்டது.. மீட்பு படை விரைந்துள்ளது..
- தடம் புரண்டது பயணிகள் இரயில்
- எட்டு பெட்டிகள் தடம் புரண்டதால் பதற்றம்.
மும்பை-புவனேஸ்வர் மார்க்கத்தில் செல்லும் லோக்மான்ய திலக் அதிவிரைவு ரயில் இன்று காலை கட்டாக்கில் உள்ள நெர்குண்டி ரெயில் நிலையம் அருகே தடம் புரண்டது. இன்று காலை சரியாக காலை 7 மணியளவில் இந்த கோர விபத்து ஏற்பட்டு உள்ளது. சலாகான் மற்றும் நெர்குண்டி இடையே ஒரு சரக்கு ரெயில் மோதியதில் அதிவிரைவு ரயிலின் எட்டு பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 40 பயணிகள் காயமடைந்துள்ளனர் என்றும் அதே நேரத்தில் இந்த விபத்தில் எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றனர். விபத்தில் காயமடைந்த பயணிகள் உள்ளூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த 5 பயணிகள் எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.இதற்கிடையில், மீட்புப் பணிகளை மேற்கொள்ள தீயணைப்புப் பணியாளர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்தை விரைந்துள்ளன. இந்த சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.