டேட்டிங் செய்ய வயது தடையில்லை! யாருடன் வேண்டுமானாலும் டேட்டிங் செய்யத் தயார்!
நடிகை ரைசா வில்சன் தமிழ் சினிமாவில், நடிகர் தனுஷ் வெளியான வேலையில்லா பட்டாதாரி 2 என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இதனை தொடர்ந்து இவர் நடிகர் ஹரிஷ் கல்யாணனுக்கு ஓடியாகா, பியார் பிரேமம் காதல் என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும், இவர் ஹரிஷ் கல்யாணின் தனுசு ராசி நேயர்களே என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் வைத்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு, ஹரிஷ் கல்யாண் உடன் டேட்டிங் செல்லத் தயார் என்று ட்வீட் செய்திருந்தார்.
இந்நிலையில் ரைசா வில்சன், சமீபத்தில் இணைய பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடி உள்ளார். அப்போது ரசிகர்கள் அவரிடம், உங்களை விட 7 வயது குறைந்தவருடன் டேட்டிங் செல்வீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த டேட்டிங் செய்ய வயது தடையில்லை. யாருடன் வேண்டுமானாலும் டேட்டிங் செய்யத் தயார் என்று ரைசா அதிரடியான கருத்தினை தெரிவித்துள்ளார்.