இந்தியாவிலேயே பாதுகாப்பான கார் டாடா அல்ட்ராஸ் தான்.. சர்வதேச விருதை வென்று சாதனை படைத்தது..
- NCAP எனப்படும் கார்களுக்கான தர மதிப்பை ஆய்வு செய்து மதிப்பெண் அளிக்கும் ஒரு அமைப்பு ஆகும்.
- இதில் தற்போது விரைவில் விற்பனைக்கு வர உள்ள டாடா அல்ட்ராஸ் கார் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த ஹேட்ச்பேக் கார் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
இந்த காரானது பாதுகாப்பு சோதனைகளில் டாடா அல்ட்ராஸ்க்கு 5-க்கு 5 மதிப்பெண் கொடுக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு ஏற்ற கார் என்ற பிரிவில் 5-க்கு 5 மதிப்பெண்ணும் குழந்தைகளுக்கு ஏற்ற கார் என்ற பிரிவில் 5-க்கு 3 மதிப்பெண்ணையும் இந்தக் கார் பெற்றுள்ளது. மேலும் இந்த காரில் பெரியவர்களுக்கு இருக்கை வசதிகள் கழுத்து மற்றும் முதுகுப் பகுதிக்கு வலி ஏற்படுத்தாதவாறு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதற்கும் பாராட்டுகள் கிடைத்துள்ளது. இந்தக் காரின் முன்பகுதியில் 2 ஏர் பேக்குகள் உள்ளன.
இந்த கார் குறித்து NCAP சர்வதேச தலைவர் மற்றும் சிஇஓ டேவிட் வார்டு கூறுகையில், “இந்தியாவில் டாடா-வின் பாதுகாப்பு சிறப்பம்சங்களுக்குக் கிடைத்த பெருமை இந்த மதிப்பெண். டாடா-வை உதாரணமாக எடுத்துக்கொண்டு மற்ற வாகன உற்பத்தியாளர்களும் பாதுகாப்பு அம்சங்களை மெருகேற்ற வேண்டும் என்றார். இந்திய நிருவனம் ஒன்று சர்வதேச அளவிலான பாடுகாப்பு தொடர்பான போட்டியில் வெற்றி பெற்றுள்ளது இந்தியாவையே பெருமை கொள்ள செய்துள்ளது.