ரஷ்ய பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ரஷ்ய பிரதமர்.. கடிதத்தை அதிபரிடம் அளித்தார் ரஷ்ய பிரதமர்…
- உலகின் பெரும் இரு வல்லரசுகளின் ஒன்றான ரஷ்யா நாட்டின் பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
- அதாவது, ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் தனது பிரதமர் பதவியை ராஜினாமா.
அதற்கான கடிதத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் அவர் வழங்கினார். அதை ஏற்றுக்கொண்ட அவர், பிரதமராக மெத்வதேவ் ஆற்றிய பணியை பாராட்டி, நன்றி தெரிவித்தார், ரஷ்ய பிரதமர் மெத்வதேவின் நோக்கங்களை, பிரதமரின் கேபினட் நிறைவேற்றத் தவறிவிட்டது என தெரிவித்ததாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் ரஷ்ய அதிபர் பாதுகாப்பு கவுன்சிலில், மெத்வதேவை அதிகாரியாக நியமிக்க விளாடிமிர் புதின் முடிவு செய்துள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு மிகவும் நெருக்கமான திமித்ரி மெத்வதேவ் ஆவர், இவர் 2012 முதல் ரஷ்யாவின் பிரதமராக பதவி வகித்து வருகிறார். 2008 – 12ம் ஆண்டு வரை ரஷ்ய அதிபராகவும் அவர் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.