10 ரூபாய்க்கு தரமான மதிய உணவு.. மகாராஷ்டிர அரசு சிவ போஜனம் என்ற பெயரில் அதிரடி.. மக்கள் மகிழ்சியுடன் வரவேற்ப்பு..

- மகாராஷ்டிரா அரசு சிவ போஜனம் என்ற பெயரில் புதிய திட்டம்.
- பொதுமக்கள் மகிழ்வுடன் எதிர்பார்ப்பு.
தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு மலிவு விலையில் உணவுகளை வழங்க ‘அம்மா உணவகம்’ தொடங்கப்பட்டது, மக்கள் மத்தியில் இந்த திட்டத்திற்க்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து ஆந்திராவில் ‘அண்ணா கேண்டீன்’ தொடங்கப்பட்டது. இதேபோல், மகாராஷ்டிராவில் புதியதாக பொறுப்பேற்றுள்ள சிவசேனா காங்கிரஸ் கூட்டணி அரசு மக்களுக்கு மலிவு விலையில் மதிய சாப்பாட்டை வழங்கக்கூடிய ‘சிவபோஜன்’ எனும் உணவுத் திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளது. இத்திட்டம் வரும் ஜனவரி 26 முதல் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தொடங்கப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டம் மூலம் மக்களுக்கு மலிவு விலையில் நல்ல சாப்பாடு வழங்க மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளது. அவ்வகையில் சிவ்போஜன் உணவு திட்டத்தின்கீழ் ஒரு சாப்பாடு ரூ.10க்கு வழங்கப்படும்.
சிவ்போஜன் திட்டத்தை அமல்படுத்த பெண்கள் சுய உதவிக்குழுக்களை நியமிக்க மாநில அரசு விரும்புகிறது. பதிவுகளை பராமரிக்க மற்றும் ஒருங்கிணைப்புக்கு உதவ ஒரு சிறப்பு மென்பொருள் ஒன்றையும் அரசாங்கம் தயாரிக்க உள்ளது. இதேபோல் 50க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களை மாநிலத்தில் பல இடங்களிலும் திறக்க திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக சிவ்போஜன் திட்டம் மாநிலத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகங்களிலும் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025