தமிழில் பிரதமர் மோடி தைப்பொங்கல் வாழ்த்து….!
- உலகம் முழுவதும் களைக்காட்டியுள்ள தமிழர் திருநாள்
- பிரதமர் மோடி ட்விட்டரில் தமிழில் வாழ்த்து
தமிழகம் மட்டுமல்லாமல் உலக முழுவதும் வாழும் தமிழ் சொந்தங்கள் அனைவரும் இன்று தமிழர் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.ஜல்லிகட்டும் களைக்கட்டி காளைகளும் வாடிவாசலில் சீறிப்பாய்ந்து வருகின்றது.சீறிப்பாயும் காளைகளை அடக்க இளங்காளைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்நிகழ்வுகளை எல்லாம் மக்கள் நேரடியாகவும் தொலைக்கட்ட்சி வழியாகவும் கண்டு ரசித்து வருகின்றனர்.இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பொங்கல் வாழ்த்து செய்தில் உலகம் முழுவதும் உள்ள தமிழ்ச் சமூகம் பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்றது.இத்திருநாள் அனைவரின் வாழ்வையும் எல்லையற்ற வளங்களால் நிரப்பிடட்டும்.அனைவரும் சிறப்பான நல்வாழ்வு பெற்றிட்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில்பிரதமர் நரேந்திர மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.