தலையை மொட்டையடித்து அதில் உணவளித்த தாய் விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க தேசிய ஆணையம் அதிரடிஉத்தரவு..
- பசியால் தவித்த பெற்ற குழந்தைகளின் பசியை போக்க தனது தலைமுடியை மொட்டை அடித்து விற்று உணவளித்த மற்றும் தற்கொலைக்கு முயன்ற பாசமிகுந்த தாய்.
- இது தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு தனது அறிககையை வீரைவில் தாக்கல் செய்ய தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் வீமனூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் தனது மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிரார். கடன்தொல்லை காரணமாக இந்த பெண்ணின் கணவர் செல்வம் ஏற்கனவே தற்கொலை செய்து இறந்துவிட்டார். இதனால் அவர் வாங்கிய கந்து வட்டி கடனை திருப்பி கேட்டு கந்துவட்டி கடன் கொடுத்தவர்கள் அந்த பெண்ணுக்கு நெருக்கடி கொடுத்தனர். பணமும் வருமாணமும் இல்லாமல் வறுமையில் வாடிய அந்த பெண் தனது 3 குழந்தைகளின் பசியை போக்க வழியின்றி தவித்தார். இதனால் அவர் தனது தலையை மொட்டையடித்து அந்த முடியை விற்றதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு தனது மற்றும் குழந்தைகளின் பசியை போக்கினார். இதனை கண்ட ஒருவர் இந்த செய்தியை முகநூலில் பதிவிட்டிருந்தார்.
இதனால் இந்த செய்தி ஊடகங்களிலும் தீயாய் பரவி தமுழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கவலை தெரிவித்துள்ள தேசிய மகளிர் ஆணையம், தமிழக அரசின் சமூகநலத்துறை, ஊட்டச்சத்து துறை செயலாளர் மதுமதிக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், `‘தலைமுடியை விற்று குழந்தைகளின் பசியை போக்கிய பெண்ணின் பிரச்னையை குறைக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பது குறித்த விவரங்களை விரைவில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தேசிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது சிறந்த நிகழ்வாக சமுக வலைதள வாசிகள் கருதுகின்றனர்.