அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது சல்மான்கானின் ரேஸ்-3 !
ஹிந்தி படங்களில் அடுத்தடுத்த பாகங்களாக படங்கள் வெளியாவது சாதாரணமாக உள்ளது.அந்த வரிசையில் அடுத்த வரிசையில்
ரேஸ் 3 படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஸ் படங்களின் வரிசையில் சல்மான் கான் நடிப்பில் ரேஸ் 3 உருவாக உள்ளது. சல்மான் ஜோடியாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடிக்கிறார்.
இவர்களுடன் டெய்சி ஷா, சபீக் சலீம் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ரொமோ டிசோசா இயக்க, ரமேஷ் தருணி தயாரிக்கிறார். கார் ரேஸை மையமாக வைத்து முழுக்க முழுக்க அதிரடியான ஆக்ஷ்ன் படத்தில் இப்படம் உருவாக உள்ளது. இந்த மாதம் படப்பிடிப்பு ஆரம்பிக்கிறது. அடுத்தாண்டு ரம்ஜான் பண்டிகையில் படத்தை ரிலீஸ் செய்வதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.