தல அஜித்துக்கு வாழ்த்து சொன்ன தளபதி விஜய்.. அறிந்திடாத புது தகவல்கள்..

- தமிழக சினிமாவின் இரு துருவங்கள் தங்களுக்குள் அன்பை பரிமாறும் சுவாரசியமான நிகழ்வு..
- தல-தளபதி உறவில் புதிய தகவல்கள்.
தமிழ் சினிமா உலகின் முடிசூடா முன்னணி நடிகர்களான தளபதி விஜய்யும், தல அஜித்தும் போட்டி நடிகர்களாக கருதப்பட்டபோதும் அவர்களுக்கு இடையேயான நட்பு சிறப்பக இருந்து வருக்கிறது. இருவரும் ஒருவர் திரைப்படத்தை ஒருவர் பாராட்டும் அளவுக்கு நெருங்கிய நண்பர்களாகவும் இருக்கிறார்கள். இந்நிலையில், சினிமா விழா ஒன்றில் தல அஜித் நடித்த விஸ்வாசம் படத்திற்கு சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான விருது வழங்கப்பட்டது.இந்த விருதினை தளபதி விஜய்யின் தந்தையான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தனது கைகளால் விஸ்வாசம் படக்குழுவினருக்கு வழங்கினார்.
இதையடுத்து அவர்,தல அஜித்தின் படங்கள் வெற்றி பெறும்போது அவருக்கு தளபதி விஜய் வாழ்த்து சொல்வார். அதேபோல் இந்த விஸ்வாசம் படம் வெற்றி பெற்றபோதும் தல அஜித், இயக்குநர் சிவா ஆகிய இருவருக்கும் தளபதி விஜயை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாக ஒரு தகவலையும் வெளியிட்டார். இந்த செய்தி ஒட்டுமொத்த சினிமா உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இது தல மற்றும் தளபதி ரசிகர்களுக்கிடையே நல்ல உறவை வளர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.