முதல் போட்டியிலும், உலகக்கோப்பை அரையிறுதி போட்டியிலும் ரன் அவுட்..புலம்பிய முன்னாள் கேப்டன்.!

- தோனி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், அந்த ரன் அவுட் குறித்து தற்போது கருத்து தெரிவித்தார்.
- முதல் போட்டியிலும், உலகக்கோப்பை அரையிறுதி போட்டியிலும் ரன் அவுட் ஆனதை புலம்பிய முன்னாள் கேப்டன் தோனி, ஏன் டைவ் அடிக்கவில்லை உருக்கம்.
இந்தியாவில் ஆஸ்திரேலிய பயணம் மேற்கொண்டு ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளது. அதை தொடர்ந்து இந்திய அணி நியூசிலாந்தில் பயணம் செய்து t20, டெஸ்ட் போட்டி மற்றும் ஒரு நாள் தொடர் விளையாடவுள்ளது அதற்கான அணியும் அறிவிக்கப்பட்டது. 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை இந்திய அணி எதிர்கொண்டது. அதில் 2-வது இன்னிங்சில் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க, மூத்த வீரர் எம்.எஸ்.தோனி களமிறங்கி விளையாடினார். அனைவரும் நம்பிக்கையுடன் காத்திருந்த போது தோனி ரன் அவுட்டாகி வெளியேறினார். அடுத்தடுத்து வந்தவர்களும் விக்கெட்களை இழந்ததால் இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
அந்த போட்டியிலிருந்து இதுவரை தோனி எந்த போட்டியிலும் விளையாடவில்லை, இதனால் அவரது ரசிகர்கள் மட்டுமல்ல கிரிக்கெட் ரசிகர்கள் கூட தோனி விளையாடுவாரா? மாட்டாரா என எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள். இந்நிலையில், தோனி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், அந்த ரன் அவுட் குறித்து தற்போது கருத்து தெரிவித்தார், அதாவது என்னோடைய முதல் போட்டியிலும் ரன் அவுட் ஆனதாகவும், நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதி போட்டியிலும் ரன் அவுட் ஆனதாகவும், தோனி குறிப்பிட்டார். மேலும் அந்த போட்டியில் நான் ஏன் டைவ் அடிக்கவில்லை என்று எப்போதும் யோசித்து கொண்டே இருப்பதாக தோனி தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!
April 7, 2025
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025