தேசத்தை திசை திருப்பவே மக்களை பிளவு படுத்துகிறார் மோடி.. ராகுல் காந்தி ஆவேச கருத்து மற்றும் சவால்..

- தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் திரும்பப் பெற வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றினைந்த ஆலோசனை கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்றது.
- இதில் ராகுல்காந்தி கூறிய கருத்து தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இதில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில், ராகுல்காந்தி, குலாம் நபி ஆசாத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட 20 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் ராகுல்காந்தி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்ததாவது,
இந்திய பொருளாதாரம் ஏன் வீழ்ந்தது என்பது பற்றி மாணவர்களிடம் பிரதமர் மோடி நிச்சயமாக விளக்கமளிக்க வேண்டும்.நமது பிரதமர், இந்தியாவின் தூண்களான இளைஞர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்க்கு பதிலாக தேசத்தை திசைதிருப்பவும் மக்களை தங்களுக்குள் பிளவுபடுத்தவும் பிரதமர் மோடி முயற்சிக்கிறார் என்றும், இளைஞர்களின் கருத்தை அடக்கக்கூடாது அதை அரசு கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும். மாணவர்களுக்கு முன்னால் நிற்க பிரதமருக்கு துளியும் தைரியம் இல்லை.
எதாவது ஒரு பல்கலைக்கழகத்திற்கும் காவல்துறை பாதுகாப்பு இல்லாமல் தனியாக சென்று இந்த நாட்டிற்கு என்ன செய்கிறார், இனி என்ன செய்யப் போகிறார் என்று உரையாட முடியுமா? என கேள்வி எழுப்பி உள்ளார். இவரது இந்த சவால் தற்போது டெல்லி வட்டாரத்தையே பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025