போராடினால் நாயை சுடுவது போல் சுட்டுக்கொல்லுவோம்…மூத்த தலைவரின் பேச்சால் சர்ச்சை

Default Image
  • பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியவர்களை நாங்கள் நாயைச் சுட்டுக்கொல்வது போல் சுட்டுக்கொன்றோம் என்று பரபரப்பு பேச்சு.
  • ரயில்களுக்கு தீ வைப்பு யாருடைய பணம்..? அப்பாக்களின் பணம் என்ற நினைப்பா..? என்று சரமாரி தாக்கு

பொதுச்சொத்துக்களை சொதப்படுத்திய போராட்டக்காரர்கள் மீது ஏன் துப்பாக்கி சூடு நடத்த வில்லை என்று மேற்கு வங்க மாநிலத்தில் நாடியா மாவட்டத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் திலீப் கோஷ் பேசியுள்ளார். இது குறித்து பேசுகையில் கடந்த டிசம்பர் மாதம் ரயில்வே சொத்துகள் மற்றும் பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்திய நபர்கள் மீது ஏன்.? மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை போராட்டக்காரர்கள் மீது தடியடியும் நடத்தப் படவில்லை இதனால் பொதுச்சொத்துக்கள் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டன. சேதமடைந்த பொருட்களின் சொத்துக்கள் எல்லாம் யாருடைய பணம் ? அவைகள் என்னுடைய பணம். ஏன்.?அது உங்களுடைய பணம்.போராட்டத்தில் ஈடுபட்டோர் ரயில்களில் தீ வைத்து        உள்ளனர். இதுவரை ஒரு தடியடியோ அல்லது ஒரு முதல்தகவல் அறிக்கையோ கூட பதிவு செய்ய வில்லை.இது தொடர்பாக  காவல்துறை ஒருவரைக் கூட இதுவரை கைது செய்ய வில்லை பொதுச்சொத்துகளைச் சேதப்படுத்தியவர்கள் அது அவர்களுடைய அப்பாவின் சொத்து என நினைத்துக் கொண்டார்களா.? வரி செலுத்துபவர்களின் பணத்தில் உருவாக்கப்பட்ட அரசின் சொத்துகளை எல்லாம்  எப்படி அவர்கள் சேதப்படுத்த முடியும்.

அசாம் மற்றும்  உத்தரப் பிரதேசத்தில் எங்களுடைய அரசு நாய்களைச் சுட்டுக் கொல்வதைப் போல போராடியவர்களைச் சுட்டுக் கொன்ற படி இங்கும் சுட்டுக் கொல்ல வேண்டும். நாங்கள் உங்களை துப்பாக்கியால் சுடுவோம் மற்றும் தடியடி நடத்துவோம் இவ்வாறு பேசிய நிலையில் மேலும் அவர்  உங்களை சிறையில் தள்ளுவோம் என தெரிவித்தார். பாஜகவின் மூத்த தலைவர்  திலீப் கோஷின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் தெரிவிக்கபட்டு வருகின்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்