முதல் குழந்தை அரசு பள்ளியில்! இரண்டாவது குழந்தை அரசு மருத்துவமனையில்! அதிரடி காட்டும் அசத்தல் கலெக்டர்!

Default Image
  • சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தாம் எனும் மாவட்ட கலெக்டர் அவனிஷ் குமார் சரண் – ருத்ராணி தம்பதி தங்களது இரண்டாவது குழந்தையை அரசு மருத்துவமனையில் பெற்றெடுத்தார். 
  • இவர்களின் முதல் குழந்தை அரசு பள்ளியில் பயின்று வருகிறது.  

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கபீர்தம் எனும் மாவட்டத்தில் ஆட்சியராக பணிபுரிந்து வருகிறார் அவனிஷ் குமார் சரண் எனும் ஐஏஎஸ் அதிகாரி. இவர் அம்மாநிலத்தில் மிகவும் நல்ல அதிகாரி என பாராட்டுகளை பெற்று வருகிறார்.

காரணம் இவரது மனைவி ருத்ராணிக்கு கடந்த 5 ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனே தனியார் மருத்துவமனைக்கு கூட்டி செல்லாமல், அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். அங்கு அவரது மனைவிக்கு சுக பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவல் அம்மாநில சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது. மேலும் அந்த ஆட்சியருக்கு பாராட்டுக்கள் குவிந்தன.

இதே போல தனது முதல் குழந்தையை அரசு பள்ளியில் படிக்கவைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு வசதிகளை மக்கள் அதிகளவில் பயன்படுத்தினால்தான், அதற்கான  தேவைகள் அதிகரிக்கும். அதனை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என விளக்கம் கொடுக்கிறார் அசத்தல் ஆட்சியர் அவனிஷ் குமார் சரண்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்