இனிப்பான செய்தி ..! பொங்கல் பரிசு பெற அவகாசம் நீட்டிப்பு
- பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
- பொங்கல் பரிசு பெற இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை வருவதையொட்டி அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.இதனுடன் பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி,1 கிலோ சர்க்கரை,2 அடி துண்டு கரும்பு,20 கிராம் முந்திரி,20 கிராம் உலர் திராட்சை,5 கிராம் ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டது.
பின்னர் ஜனவரி 9 முதல் 12ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது. பொங்கல் பரிசுத்தொகுப்பும், ரூ.1000 ரொக்கத் தொகையும் ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும்,கடந்த 9-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பும் ,ரூ.1000 ரொக்கத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று பொங்கல் பரிசு பெற கடைசி நாளாக இருந்த நிலையில் வரும் 21ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது .