டிகிரி முடித்தவர்களுக்கு ஸ்டேட் பேங்கில் 8000 காலிப்பணியிடங்கள்! இப்போதே விண்ணப்பியுங்கள்…

Default Image
  • பாரத ஸ்டேட் வங்கியில் தற்போது கிளார்க் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
  • இந்தியா முழுவதும் 8000 காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 

பொது துறை வங்கிகளில் முக்கியமான வங்கியான  பாரத ஸ்டேட் வங்கியில் தற்போது கிளார்க் பணியில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப தற்போது தேர்வை பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன் படி, ஸ்டேட் பேங்க் கிளார்க் பணிகளில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள 8000 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியியாகி உள்ளது. இதில், தமிழகத்திற்கு 393 காலிப்பணியிடங்களும், புதுசேரிக்கு 7 காலிப்பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டேட் பேங்கின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வினை எழுத ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட காலத்திற்குள் சான்றை சமர்பிக்கவேண்டும். ஜனவரி 26ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி. பிப்ரவரி/மார்ச் மதம் முதல்நிலை தேர்வும், ஏப்ரல் 19இல் இறுதி தேர்வும் நடைபெறும். 20 வயது நிரம்பியவர்கள் முதல் 28 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணபிய்க்கலாம். வயது தளர்வு விதிகளின் படி வழங்கப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்