சபரிமலை சீராய்வு மனுக்களை விசாரிக்க போவதில்லை! – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி!
- சபரிமலை விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை விசாரிக்க போவதில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- அந்த சீராய்வு மனுவினால் ஏற்பட்டுள்ள சில முக்கிய கேள்விகளை மட்டுமே கேட்க உள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களும் செல்லலாம் என்கிற தீர்ப்பை 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து பல்வேறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த சீராய்வு மனுக்கள் கடந்த வருடம் நவம்பர் மாதம் அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் விசாரணை தொடங்கியது.
அதன் பிறகு , அந்த சீராய்வு மனுவில் முடிவு எட்டப்படாததால், சீராய்வு மனுக்களின் மீதான விசாரணையை 9 பேர் கொண்ட நீதிபதி அமர்வுக்கு மாற்றி பரிந்துரை செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதி பாப்டே தலைமையிலான 9 பேர் கொண்ட நீதிபதி அமர்வு இன்று முதல் சீராய்வு மனுக்களை விசாரிக்க தொடங்கும் என கூறப்பட்டது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய சீராய்வு மனுக்களை விசாரிக்க போவதில்லை என உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. மாறாக சீராய்வு மனுக்கள் சம்பந்தப்பட்ட சில முக்கிய கேள்விகளை மட்டும் எழுப்ப உள்ளதாக உச்சநீதிமன்ற 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு தெரிவித்துள்ளது.
ஆண், பெண் என்கிற பாகுபாடு கோவில் வழிபாட்டு முறைகளை சார்ந்ததா? பெண்களின் மாதவிடாய் காலங்களுக்கும் கோவில் வழிபாட்டிற்கும் தொடர்பு உள்ளதா? கோவில், மசூதிகளில் பெண்களுக்கு மட்டும் பாகுபாடு பார்ப்பதேன்? என்பது போன்ற சில கேள்விகளை மட்டும் 9 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு கேட்க உள்ளதாம். புதிய சீராய்வு மனுக்கள் மீது விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கப்போவதில்லை என கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்ற சாசன அமர்வு தற்போது உத்தரவிட்டுள்ளது.