நான் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் தமிழை மறக்காமல் இருப்பதற்கு இது தான் காரணம்! ஏ.ஆர்.ரகுமானின் அதிரடியான கருத்து!
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ரோஜா திரைப்படத்தின் வாயிலாக இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் இந்தி,தமிழ் மற்றும் ஆங்கிலம் என பல மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார்.
இந்நிலையில், இவர் கவிஞர் வைரமுத்து அவர்கள் குறித்து பேசுகையில், என் இசையில் 50% வைரமுத்துவின் தமிழ் இருக்கிறது. அதற்கான மரியாதை எப்போதும் உண்டு. நான் மீண்டும் வைரமுத்துவுடன் இணைவேனா என்பதை பின்னர் அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.
மேலும், திரைத்துறை பெண்களுக்கு பாதுகாப்பானதாக மைய வேண்டும் என்றும், நான் எவ்வளவு சென்றாலும் தமிழை மறக்காமல் இருப்பதற்கு காரணம் ரசிகர்களின் அன்பே எனக் கூறியுள்ளார்.