பதறிய வங்கி நிர்வாகம்.! ஏடிஎம்மில் ரூ.100-க்கு பதிலாக ரூ.500 நோட்டுகள் .!
- மடிக்கேரி பகுதியில் கனரா வங்கி ஏடிஎம் உள்ளது. அந்த ஏடிஎம்மில் ரூ.100-க்கு பதிலாக ரூ.500 வந்துள்ளது.
- பின்னர் ஏடிஎம்மில் பணம் எடுத்துச் சென்ற வாடிக்கையாளர் தொடர்பு கொண்டு வங்கி நிர்வாகம் பணத்தை திருப்பி வாங்கி உள்ளது.
கர்நாடக மாநிலம் கொடகு மாவட்டத்தில் உள்ள மடிக்கேரி பகுதியில் கனரா வங்கி ஏடிஎம் உள்ளது. அந்த ஏடிஎம்மில் ரூ.100-க்கு பதிலாக ரூ.500 வந்துள்ளது. இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவி அப்பகுதியில் உள்ள மக்கள் அவசர அவசரமாக பணத்தை எடுத்துச் சென்றனர். ஆனால் இந்த செய்தி வங்கி அதிகாரிகளுக்கு தெரிவதற்குள் 1.7 லட்சம் பணத்தை பொதுமக்கள் எடுத்து சென்றுள்ளனர்.
பின்னர் அங்கு வந்த வங்கி ஊழியர்கள் இது குறித்து விசாரித்து ஏடிஎம்மில் பணம் எடுத்துச் சென்ற வாடிக்கையாளர் தொடர்பு கொண்டு வங்கி நிர்வாகம் பணத்தை திருப்பி வாங்கி உள்ளது.வாடிக்கையாளர்கள் பணத்தை கொடுக்கும்போது இது இது வங்கியின் தவறுதானே..எங்களுடைய தவறு இல்லை என விவாதம் செய்துள்ளனர்.
மேலும் இரண்டு வாடிக்கையாளர்கள் மட்டும் ரூ. 65 ஆயிரம் எடுத்து சென்ற நிலையில் வங்கி ஊழியர்கள் அந்த வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்க காவல்துறை உதவியை நாடினர். பின்னர் காவல்துறை அந்த வாடிக்கையாளரை கண்டுபிடித்து பேச்சுவார்த்தை நடத்தி பணத்தைவங்கி ஊழியர்களிடம் ஒப்படைத்தனர்.
இந்த கனரா ஏடிஎம்மில் பணம் நிரப்பிய நிறுவனம் ரூ.100 ரூபாய் நோட்டுகள் வைக்க வேண்டிய இடத்தில் ரூ.500 நோட்டுகளை வைத்துள்ளது.இதனால் தான் இதுபோன்ற தவறு நடந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.