மறைமுகத் தேர்தல் : சேலத்தில் கணக்கை தொடங்கிய பாமக

- மறைமுக தேர்வு தேர்தல் நடைபெற்று வருகிறது.
- சேலம் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவருக்கான தேர்தலில் பாமக வெற்றிபெற்றுள்ளது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் உள்ளிட்டவற்றிக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவருக்கான தேர்தலில் அதிமுக, பாமக மற்றும் தேமுதிக உறுப்பினர்கள் 21 பேரும் திமுக உறுப்பினர்கள் 5 பேரும் பங்கேற்றனர்.மொத்தமாக இந்த தேர்தலில் 26 வாக்குகள் பதிவாகியது. இதில், பாமக வேட்பாளர் ரேவதி 22 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று மாவட்ட ஊராட்சிக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.ஆனால் ரேவதியை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் நல்லம்மாள் 4 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025