குளிக்கவில்லை, பல் துலக்கவில்லை, தாடி எடுக்கவில்லை! அதனால் விவாகரத்து தாருங்கள்!
- கணவர் 10 நாளாக குளிக்கவில்லை அதனால் தனக்கு விவாகரத்து கொடுங்கள் என மனைவி புகார் அளித்துள்ளார்.
- அந்த பெண்ணிற்கு ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது. 2 மாத அவகாசத்தை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் கமிஷனர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் விஷாலி மாவட்டத்தில் வசித்து வரும் மனிஷ் ராம் – சோனி தேவி எனும் இளம் தம்பதி கடந்த 2017இல் திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு குழந்தை இல்லை. இதில் மனிஷ் ராம் மனைவி சோனி தேவி அண்மையில் அம்மாநில பெண்கள் கமிஷனரிடம் புகாரளித்துள்ளார்.
அந்த புகாரில் தன் கணவர் மனிஷ் ராம், நடவடிக்கை சுத்தமாக பிடிக்கவில்லை. அவர் 10 நாளாக குளிக்கவில்லை. பல்துலக்கவில்லை, தாடி ஷேவ் செய்யவில்லை. அதனால் அவருடன் வாழ்வதே என்னால் சகித்து கொள்ளமுடியவில்லை என கூறி, அதனால் தனக்கு விவாகரத்து பெற்று தரும்படி கேட்டுள்ளார்.
இந்த புகாரை படித்து தம்பதியினரை வரவழைத்த கமிஷனர் தரப்பு, அந்த பெண்ணிற்கு கவுன்சலிங் வழங்கியுள்ளார்கள். மேலும் 2 மாதம் அவகாசம் கொடுத்துள்ளார்கள். 2 மாதம் களைத்து மீண்டும் இதே பிரச்சனை எழுந்தால், அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என உள்ளனர்.