விரைவில் மின்சாரத்தால் இயங்கும் கார் ரகங்களான டியாகோ ஈவி மற்றும் டிகோர் ஈவி !
கார் ரகங்களான டியாகோ ஈவி (Tiago EV) மற்றும் டிகோர் ஈவி (Tigor EV) உள்ளிட்ட மின்சாரத்தால் இயங்கும் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
கிரேட்டர் நொய்டாவில் நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போ 2018-ல், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2 எலக்ட்ரிக் கார்களும் இடம்பெற்றிருந்தன. இதுகுறித்த பேட்டியளித்த அந்நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியும், மேலாண் இயக்குநருமான குவென்டர் பட்ஸ்செக், ஒரு சில மாதங்களில் மின்சாரத்தால் இயங்கும் கார்கள் சந்தைக்கு வரும் என தெரிவித்தார்.
80 சதவீத சார்ஜ் ஆக 6 மணி நேரம் ஆகும் எனவும், ஃபாஸ்ட் சார்ஜிங் முறையில் ஒன்றரை மணி நேரத்தில் காரை சார்ஜ் செய்யலாம் எனவும் அவர் தெரிவித்தார். 8 முதல் 10 லட்சம் ரூபாய் என்ற விலையில் இந்த கார்கள் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.