கட்சியிலிருந்து எழுந்த வற்புறுத்தலால் தென் ஆப்பிரிக்க அதிபர் ராஜினாமா!
ஜேக்கப் ஜூமா (jacob ZUMA) கட்சியிலிருந்து எழுந்த வற்புறுத்தலால் தென் ஆப்பிரிக்க அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் . பதவி விலகப் போவதில்லை என பிடிவாதம் காட்டி வந்த நிலையில் ராஜினாமா செய்யாவிட்டால், நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு பதவியில் இருந்து நீக்கப்போவதாக ஆளும் கட்சி கொடுத்த அழுத்தம் காரணமாக அவர் தனது ராஜினாமாவை அறிவித்தார்.
அதே நேரத்தில், கட்சியின் முடிவுடன் தமக்கு உடன்பாடு இல்லை என்றும் ஜூமா தெரிவித்தார். இதனால் புதிய அதிபராக துணை அதிபர் சிரில் ராமபோசா தேர்வு செய்யப்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளது. ஊழல் புகாருக்கு ஆளான ஜூமாவின் நெருங்கிய உறவினர்கள் வீடுகளில் காவல்துறையினர் நடத்திய சோதனைகளை அடுத்து ஜூமா பதவியில் நீடிக்க எதிர்ப்பு எழுந்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.