இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடம் !
இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது.
தொடரின் ஆரம்பத்தில் ஒருநாள் போட்டி தரவரிசையில் 121 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா முதலிடத்தில் இருந்தது. ஆனால் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்ற போதே 2 புள்ளிகளைப் பெற்று 120 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியது.
தற்போது தொடரைக் கைப்பற்றியதால், இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியா 122 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளதால் மீதமுள்ள ஒரு போட்டியில் தோற்றாலும் முதலிடத்திற்கு பாதிப்பு ஏற்படாது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.