ஸ்டாலினுக்கு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதில் எந்த உள் நோக்கமும் இல்லை -ஓ.பன்னீர்செல்வம்
- ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த மத்திய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு திரும்பப்பெறப்பட்டது.
- மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு வேண்டாம் என கருதியதால் தான் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டு இருக்கிறது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த மத்திய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு திரும்பப்பெறப்பட்டது.இந்நிலையில் இது குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், ஸ்டாலினுக்கு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதில் எந்த உள் நோக்கமும் இல்லை. மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு வேண்டாம் என கருதியதால் தான் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டு இருக்கிறது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உள்துறை எனக்கு பாதுகாப்பு அளித்து வந்தது. அது வேண்டாம் என உள்துறை அமைச்சகம் கருதியதால் அது விலக்கிக்கொள்ளப்பட்டு உள்ளது.சி.ஏ.ஏ. குறித்து நிலையான நிலைப்பாட்டை சட்டமன்றத்தில் கூறியிருக்கிறோம். சிறுபான்மை மக்களுக்கு எந்த வித சிறு இடர்பாடும் வராமல் அவர்கள் முழு நலனையும் அதிமுக அரசு பாதுகாக்கும் என்று தெரிவித்துள்ளார்.