வரலாற்றில் இன்று(10.01.2020)… இந்தியா-பாகிஸ்தான் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்ட தினம்..
- இந்தியா-பாகிஸ்தான் 1965 போர் நடந்து இருதரப்பும் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்ட தினம் இன்று.
- சாஸ்திரி மற்றும் ஆயுப்கான் ஆகியோர் போர் நிறுத்தத்தை அறிவித்த தினம்.
வரலாற்றில் இன்று கடந்த 1965ஆம் ஆண்டு இந்தியாவுடன் பாகிஸ்தான் நடத்திய போரின் காரணமாக பல்வேறு நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் தலையீடுகளாலும் ரஷ்யா முயற்ச்சியாலும் இருநாடுகளும் அமைதி ஒப்பந்தத்தில் ஜனவரி மாதம் 10ம் நாள் 1966ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.
இந்த ஒப்பந்தம் ரஷ்யாவின் தாஷ்கண்ட் என்ற இடத்தில் நடைபெற்றதால் இந்த உடன்படிக்கையை தாஷ்கண்ட் உடன்படிக்கை என்றே அழைக்கப்படுகிறது.
போருக்கான காரணம்:
காஷ்மீர் பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் இந்தியா மீது 1965 ஆம் ஆண்டு போரைத் தொடங்கியது. இந்தப்போரில் இந்தியாவும் கடுமையான பதிலடியை திருப்பித் தந்தது. போரின் போக்கு உக்கிரமாக சென்றதை தொடர்ந்து, ஐ.நா. தலையீடு காரணமாக போர் நிறுத்தம் ஏற்பட்டது. இருநாடுகளுக்கும் இடையில் சோவியத் யூனியன் சமாதான முயற்சிகள் மேற்கொண்டது.
எனவே, இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் அயூப் கான் இருவரும் சோவியத் யூனியனை சேர்ந்த உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் சோவியத் யூனியன் தலைவர் அலெக்சி கோசிஜின் முன்னிலையில் 1966 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி ஒரு சமாதான உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர். அதுவே தாஷ்கண்ட் உடன்படிக்கை ஆகும். இந்த உடன்படிக்கையின்படி இந்தியா பாகிஸ்தான் இருநாட்டுப் படைகளும் 1949 ஆம் ஆண்டு சண்டை நிறுத்தத்தின் பொது இருந்த வரையறைக் கோட்டுக்கு வெளியே தத்தம் படைகளை நிறுத்திக் கொள்வது என்று முடிவாகியது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் போர்நிறுத்தம் அறிமுகமானது, இந்த ஒப்பந்தம் போடப்பட்டது காலச்சுவடில் இன்று.