கற்றாழையில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா ..?

Default Image

கற்றாழை மருந்து பொருட்களாகவும் , அழகு சாதனப் பொருள்களாகவும் பயன்படுகிறது. இது சரும நோய்களுக்கு முடி போன்ற பல பிரச்சினைகளுக்கும் கற்றாழை பயன்படுகிறது. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது .

இதனால் பல வகையான நோய்கள் குணமாகும் தன்மைகொண்டது. இந்நிலையில் கற்றாழை சருமத்திற்கு எந்த வகை உதவி புரிகிறது என்பதை பற்றி பார்க்கலாம்.

நன்மைகள்:

கற்றாழை ஜெல் சுத்தமான நீரில் கழுவி சுத்தம் செய்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இளமை நீண்ட நாள் நிலைக்கும்.

சிலருக்கு முகம் வறண்டு வயதான தோற்றம் போல் இருக்கும் அப்படிப்பட்டவர்கள் கற்றாழை ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் ஜொலிக்கும்.

கற்றாழை ஜெல்லை தொடர்ந்து முகத்தில் தேய்த்து வர சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் காணப்படும்.

பாத எரிச்சல் மற்றும் பாத வெடிப்பு உள்ளவர்கள் இரவு படுக்கும்முன் கற்றாழையின் நுங்கு பகுதியினை பாதத்தின் அடியில் வைத்து தடவிக் கொண்டு படுத்தால் இது அனைத்தும் குணமாகும்.

தலைமுடி வளர்ச்சி குறைவாக உள்ளவர்கள் சோற்றுக் கற்றாழை மடலை நீக்கி சாறெடுத்து அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாட்கள் வெயிலில் காய வைத்து தலைக்கு தொடர்ந்து தேய்த்து வந்தால் தலைமுடி நன்கு வளரும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்