ரூ. 2582 கோடியில் 34,871 நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளது -முதலமைச்சர் பழனிசாமி
- தமிழக சட்டப்பேரவை நடைபெற்றது.
- பேரவையில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 838 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கடந்த 6-ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது.இறுதி நாளான நேற்று தமிழக முதலமைச்சர் பழனிசாமி உரையாற்றினார்.அப்பொழுது அவர் பேசுகையில், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 838 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளது .தமிழகம் முழுவதும் 4.40 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது .
ரூ. 407 கோடி செலவில் 11 மாவட்டங்களில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது .கழிவு நீரை சுத்திகரித்து குடிநீராக்கும் முதல் நகரமாக சென்னை உள்ளது.
ரூ. 2582 கோடியில் 34,871 நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளது.தேவைப்படும் இடங்களில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்.சிறுபான்மையினரின் பாதுகாப்பில் அதிமுக அரசு அரணாக இருக்கும் .பழனிசாமி வண்டலூர் உயிரியல் பூங்கா சர்வதேச தரத்திற்கு தரம் உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்.