மத்திய அரசின் உயரிய பாதுகாப்பு வாபஸ்..முன்னால் முதல்வர் மற்றும் எதிர்கட்சி தலைவர் ஆகியோருக்கு ஷாக் கொடுக்கும் சம்பவம்..

Default Image
  • தமிழக அரசியலில் முக்கியமானவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கிட மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பை வழங்கி வருகிறது,
  • இந்நிலையில்,தமிழக தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ்.

இந்த படை இவர்களின் பாதுகாப்பை உரிய முறையில் திட்டம் வகுத்து பாதுகாக்கிறது. இந்நிலையில் இவர்களின் இந்த பாதுகாப்பை மத்திய அரசு தற்போது ஒவ்வொருவராக திரும்பப்பெற்று வருகிறது. இதில் முன்னால் பிரதமரும் விலக்கல்ல.

Related image

இந்த வகையில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,மற்றும் தமிழக எதிர்கட்சி தலைவர் மற்றும்  தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கும் இந்த வகை பாதுகாப்பு  வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த  பாதுகாப்பு திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது என தற்போது  தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில், தமிழக எதிர்கட்சி தலைவர் மற்றும்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு  வழங்கப்பட்டு வந்த Y பிரிவு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Image result for y security in ops

இதற்கு மாற்றாக, இதற்கு இணையான தமிழக அரசின் காவல்துறை சார்பாக உயரிய பாதுகாப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுவரை தமிழக துணை முதல்வரும் முன்னால் தமிழக முதல்வருமான  ஓ.பி.எஸ்.-க்கு வழங்கப்பட்டிருந்த மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இந்த வகையில் முன்னால் பிரதமர் முதல் முன்னால் முதல்வர் வரை பாதுகாப்பை திரும்பப்பெரும் இந்த மத்திய அரசின் செயல் தற்போது பேசு பொருளாக ஊள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்