தற்காப்பு கலை கற்கும் பிரபல நடிகை! எதற்காக தெரியுமா?
நடிகை ரெஜினா கண்ட நாள் முதல் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் தற்போது இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் வரும் உருவாகி வரும் பெயரிடப்படாத புதிய படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதுகுறித்து நடிகை ரெஜினா அவர்கள் கூறுகையில், “தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் தொல் பொருள் ஆய்வாளராக நடிப்பதாகவும், இதற்காக தற்காப்பு கலையை கற்பதாகவும்” கூறியுள்ளார்.