#Breaking : ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பா? 3 நபர்கள் அதிரடி கைது!
- குடியரசு தினம் நெருங்கும் வேளையில் நாட்டில் பல இடங்களில் போலிசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- இந்த தீவிர சோதனையில் 3 நபர்கள் சதேகத்தின் பெயரில் டெல்லி சிறப்பு காவல் பிரிவினரால் கைது செய்யபட்டு விசாரித்து வருகின்றனர்.
நாட்டில் அவ்வப்போது தீவிரவாதிகளின் நடமாட்டம் அல்லது அவர்களுடனான தொடர்பு குறித்து சோதனைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிய வேளையில் இருந்து நாடு முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
கேரளா, பெங்களூரு என பல இடங்களில் சந்தேகக்கப்டும் நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். தற்போது தலைநகர் டெல்லியில் சதேகக்கும்படியான 3 நபர்களை டெல்லி சிறப்பு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பிருக்கிறதா என்கிற கோணத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
குடியரசு தினம் நெருங்கும் வேளையில் நாட்டில் பெரும்பாலான இடத்தில் போலீசார் தொடர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.