எஸ்.ஐ. கொலை செய்த சம்பவத்தில் சந்தேக நபர்களின் புகைப்படங்கள் வெளியானது.!
- நேற்று இரவு சோதனைச்சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் பணியில் இருந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் வில்சனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
- சிசிடிவி காட்சிகளை வைத்து சந்தேகத்தின் பெயரில் இரண்டு பேரின் புகைப்படங்களை பொலிசார் தற்போது வெளியிட்டு உள்ளனர்.
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு மணல் கடத்தப்படுவதாக புகார் எழுந்த நிலையில் மணல் கொள்ளையர்களை பிடிப்பதற்காக கன்னியாகுமரி மாவட்ட போலீசார் பல நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழக -கேரள எல்லையில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு வாகனங்களை சோதனை செய்து பின்னர் அனுப்புகின்றனர்.
இந்நிலையில் இந்த சோதனைச் சாவடியில் தினமும் 2 போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்து வருகின்றன. இதையெடுத்து நேற்று இரவு சோதனைச்சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் பணியில் இருந்துள்ளார். இரவு 09. 40 மணி அளவில் சோதனை சாவடி அருகில் ஒரு கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய மர்ம நபர்கள் பணியில் இருந்த வில்சன் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
பின்னர் துப்பாக்கி சத்தம் கேட்டு அங்கு விரைந்து வந்த பொதுமக்கள் பார்த்த வில்சன் தலை , மார்பு , கால் பகுதிகளில் குண்டு பாய்ந்த நிலையில் இறந்து கிடந்தார். பின்னர் உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் வில்சனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே வில்சன் இறந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது சந்தேகத்தின் பெயரில் இரண்டு பேரின் புகைப்படங்களை பொலிசார் தற்போது வெளியிட்டு உள்ளனர்.