ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்க முடியாது.! நான் அதிபராக இருக்கும் வரை நடக்காது – ட்ரம்ப் பேட்டி

Default Image
  • ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்க முடியாது. நான் அமெரிக்க அதிபராக இருக்கும் வரை ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்க மாட்டோம்.
  • மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் அமெரிக்காவுக்கு தேவையில்லை. எனவும் கூறினார்.

ஈராக் தலைநகர் பாக்தாக் விமான நிலையத்தின் அருகே கடந்த 3-ம் தேதி அமெரிக்க நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரான் நாட்டின் உளவுத்துறை இராணுவ தளபதி காசிம் சுலைமானி மற்றும்  ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் துணை தலைவர் அபு மகாதி உள்ளிட்ட 7 பேர் இறந்தனர்.

இதைத்தொடர்ந்து ஈரான் நேற்று அதிகாலை ஈராக்கின் அல் அசாத் பகுதியில் உள்ள அமெரிக்க படைகள் உள்ள ராணுவ தளத்தின் மீது  10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி  தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டொனால்டு டிரம்ப் ,ஈரான் நடத்திய தாக்குதலால் அமெரிக்க படைத்தளங்களில் சிறிய அளவில் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டு உள்ளது அமெரிக்கர்கள் யாரும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்க முடியாது. நான் அமெரிக்க அதிபராக இருக்கும் வரை ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்க மாட்டோம்.அணு ஆயுத திட்டத்தை  ஈரான்  கைவிட வேண்டும்.மேலும் ஈரான் மீது பொருளாதாரத்தடைகள் விதிக்கப்படும்.

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் அமெரிக்காவுக்கு தேவையில்லை. ஈரான் பயங்கரவாத நடவடிக்கையை கைவிடாவிட்டால் மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி நிலவாது என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்