அதிகம் தண்ணீர் குடிப்பதால் 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல ஆஸ்திரேலியா முடிவு .!
- தெற்கு ஆஸ்திரேலியா பகுதிகளில் உள்ள ஃபெரல்வகை ஒட்டகங்கள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு வந்து அவர்கள் பயன்படுத்தும் தண்ணீரை ஒட்டகங்கள் குடித்து விடுகின்றனர்.
- சுமார் 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெற்கு ஆஸ்திரேலியா பகுதிகளில் அதிகமாக ஃபெரல்வகை ஒட்டகங்கள் காணப்படுகிறது. இந்த ஒட்டகங்கள் அதிகமாக தண்ணீர் குடித்து அங்கு வாழும் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல அந்நாட்டு அரசு முடிவு எடுத்து உள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்த பகுதியில் வறட்சி காலங்களின் போது ஒட்டகங்கள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு வந்து அவர்கள் பயன்படுத்தும் தண்ணீரை ஒட்டகங்கள் குடித்து விடுவதாகவும் ,போக்குவரத்திற்கு இடையூறாகவும் இந்த ஒட்டகங்கள் இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் சுமார் 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த ஒட்டகங்களை கொல்வதற்கு சிறப்புக் குழுவையும் அந்நாட்டு அரசு அமைத்துள்ளது. ஹெலிகாப்டரில் மூலம் ஒட்டகங்களை கொல்லும் பணியை இந்தக்குழு மேற்கொள்வார்கள் எனவும் கூறப்படுகிறது.