சலுகைகளை ஆதார் இல்லை என்றால் மறுக்கக் கூடாது!
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆதார் இல்லாததைக் காரணம் காட்டி அரசு நலத்திட்ட பயன்களை வழங்க மறுக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.
டெல்லியில், மாநில தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர்கள் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய ரவிசங்கர் பிரசாத், ஆதார் இல்லாததைக் காரணம் காட்டி சிலருக்கு ரேஷன் பொருட்கள் மறுக்கப்படுவதாகவும், அத்தகைய நிகழ்வுகள் தொடரக் கூடாது என்றும் கூறினார். இதுவரை ஆதார் பெறாதவர்களை உடனடியாக வாங்குமாறு அறிவுரை கூற வேண்டுமே தவிர, அதைக் காரணம் காட்டி அவர்களுக்கான சலுகைகளை மறுக்கக் கூடாது எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.
அதேபோல், முதியோரின் கை விரல் ரேகை ஆதாருடன் ஒத்துப் போகாத நிலையில், அவருடைய அடையாள எண்ணை குறித்துக் கொண்டு திட்டப்பயன்களை வழங்க வேண்டும் எனவும் ரவிசங்கர் பிரசாத் அறிவுறுத்தினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.