வரலாற்றில் இன்று(08.01.2020).. இரண்டாம் ஐன்ஸ்டீன் ‘ஹாக்கிங்’ பிறந்த தினம்…
- ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் என்பவர் ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார்,
- இயற்பியல் அறிவியலாரான ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் பிறந்த தினம் இன்று.
பிறப்பு மற்றும் கல்வி:
இவர் இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் ஜனவரி மாதம் 8ம் தேதி 1942ம் ஆண்டு பிறந்தார். இவர் தனது பள்ளிக்கல்வியை செடின்ட் அல்பான்சு பள்ளியிலும் பின் கல்லூரி கல்வியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்திலும் பயின்றார்.பின் டிரினிட்டி கல்லூரியிலும், கேம்பிரிட்ச் பல்கலைகழகத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டமும் பெற்றார்.
வாழ்க்கை போராட்டம்:
வருக்கு 21 வயதிலேயே அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (Amyotrophic Lateral Sclerosis,) என்னும் நரம்பு நோயால் தாக்கப்பட்ட இவர், இந்த குணப்படுத்த முடியாத நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கை, கால் முதலிய உடலியக்கங்களும் பாதிக்கப்பட்டது.
மேலும், தந்து பேச்சையும் இழந்தநிலையில் இவர் கணினியூடாகப் பேச்சுத் தொகுப்பி எனற சாதனம் மூலம் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் நிலைக்குத்தள்ளப்பட்டார். ஆயினும் இவர், இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும், பொதுவாழ்விலும் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார்.
தனது துறையின் மீதான அதீத ஈடுபாடு:
ஒருமுறை, 1986-ல் அமெரிக்காவில் உள்ள அனென்பெர்க் அறக்கட்டளையின் சார்பில், இயற்பியல் கணிதத்தை மாணவர்களுக்குப் எளிய நடையில் புதிய கோணத்தில் வடிவமைப்பவர்களுக்கு 6 மில்லியன் டாலர் பரிசு என அறிவித்தது.
இந்த கடினமான சவாலை ஏற்று, இயற்பியல் அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் அரை மணி நேரத்திற்கு ஒரு காட்சி விளக்கம் வீதம் 26 மணி நேரம் ஓடக் கூடிய ‘காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ என்ற பாடத் திட்டத்தை உருவாக்கிக் கொடுத்து அந்த பரிசு தொகையையும் பெற்றார். இத்தகைய சிறந்த படைப்பான ‘காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ என்ற புத்தகத்தை உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை 2000ம் ஆண்டு ஒரு கோடி ரூபாய் செலவில் தமிழ் மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டது.
இவர் எழுதிய அறிவியல் நூல்களான:
- நேரத்தின் ஒரு சுருக்க வரலாறு (A Brief History of Time)தமிழ் பெயர்ப்பு,
- The Universe in a Nutshell ஆகிய இரண்டும், உலகம் முழுவதும் மிகப் பிரபலமாக விற்பனையாகிச் சாதனை படைத்தன.
இந்த நூள்களை சாதாரண மக்களும் வாசித்துப் பயனடையும் வகையில் எளிதாக, இலகுவான மொழியில், அறிவியற் சமன்பாடுகள் இல்லாமல் எழுதப்பட்ட இந்தநூல்கள் அனைவரையும் கவர்ந்தது. மேலும், ஸ்டீபன் ஹாக்கிங் தமது பெயரைக் காப்புரிமை செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்துக்கான லூக்காசியன் பேராசிரியராக இருந்தார்.இவரது
இவருடைய முக்கியமான ஆய்வுத்துறைகள்:,
- அண்டவியல் (cosmology),
- குவாண்ட்டம் ஈர்ப்பும் (quantum gravity) ஆகும்.
- கருங்குழி (black holes)களுக்கும்,
- வெப்ப இயக்கவியலுக்குமான தொடர்புகள் பற்றிய கட்டுரைகள் ஆகியவை ஆராய்ச்சித் துறைக்கான இவரது முக்கியமான பங்களிப்புகள் ஆகும்.
மேலும், கருங்குழிகளிலிருந்து ஒளியுட்பட எதுவுமே வெளியேறமுடியாது என்று நம்பப்பட்டதற்கு மாறாகக் கருங்குழிகளிலிருந்து துகள்கள் (Particles) தொடர்ந்து வெளியேறுகின்றன என்றும், அதன்மூலம் அந்த துகள்கள் காலப்போக்கில் இல்லாமல் போய்விடுகின்றன என்றும், இவரது ஆராய்ச்சிகள் காட்டின. இவ்வெளியேறும் கற்றைக்கு ஹாக்கிங் கதிர்வீச்சு என்று பெயர்.
மறைவு:
ஹாக்கிங் மார்ச் மாதம் 14ம் தேதி 2018 அன்று அதிகாலையில் கேம்பிரிட்ஜில் உள்ள அவரது வீட்டில் தனது 76 ஆவது வயதில் இயற்கையை எய்தினானார்.