6 செயற்கை மனிதர்களை அறிமுகம் செய்த ஸ்டார் லேப் நிறுவனம்.! விரைவில் துணையை அறிமுகப்படுத்த திட்டம்.!
- அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெறும் மின்சாதன பொருட்களின் பொருட்காட்சியில் சாம்சங்கின் துணை நிறுவனமான ஸ்டார் லேப், நியான் என்கிற 6 செயற்கை மனிதனை அறிமுகப்படுத்தியுள்ளது.
- நடப்பாண்டின் இறுதியில் இந்த செயற்கை மனிதர்களுக்கான துணையை அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளதாகவும் தெரிவித்தது.
சாம்சங்கின் துணை நிறுவனமான ஸ்டார் லேப், நியான் என்கிற செயற்கை மனிதனை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்று வரும் நுகர்வோருக்கான மின்சாதன பொருட்களின் பொருட்காட்சியில், செயற்கை நுண்ணறிவு கொண்டு செயல்படும் 6 செயற்கை மனிதர்களை ஸ்டார் லேப் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதில் சாதாரண மனிதர்களை போன்று இவை அனைத்து வகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்த கூடியதாய் உள்ளது. மனிதர்கள் உடனான உரையாடலை சேமித்து வைத்து அதன் மூலம் கற்றுகொண்டு, சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படும் திறன் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நடப்பாண்டின் இறுதியில் இந்த செயற்கை மனிதர்களுக்கான துணையை அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளதாகவும் ஸ்டார் லேப் தெரிவித்துள்ளது.
We’re ready – are you? #CES2020 #NEON https://t.co/mxleTyasNG
— NEON (@neondotlife) January 5, 2020