ஜெயலலிதா செய்தது சரி என்றால் நான் செய்ததும் சரியே.. ஆளுநர் உரை நகலை கிழிப்பு விவகாரத்தில் அன்பழகன் அதிரடி..

Default Image
  • இன்று தமிழக சட்டமன்றத்தில்  ஆளுநர் உரை மீதான விவாதத்தில், உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் அதிமுக கட்சி ஆட்சியில் சிறப்பாக நடந்தது என்று பேசினர்.
  • இந்நிலையில், இது குறித்து ,திமுக சார்பில் கருத்து கூறிய ஜெ.அன்பழகன், பதில் அளித்து பேசுகிறபோது, இந்த தேர்தலில் நடந்த  முறைகேடுகளை பட்டியலிட்டு பேசினார்.

மேலும், சபாநாயகரிடம் சென்று, அவர், தயாரித்த குறிப்புகளைக் காட்டி, மேலும்,  5 நிமிடங்கள் ஆளுநர் உரை மீது பேச வாய்ப்பளிக்கவேண்டும் எனக் கேட்டார்.ஆனால் சபாநாயகர்  அனுமதி வழங்காமல், பேசக்கூடாது என்று கூறவே,  அவைத் தலைவரே நான் பேசக்கூடாது என்று சொன்னால், நான் யாரை நம்பி இந்த அவைக்கு வருவது. என்று ஆவேசமாக ஆளுநர் உரையை சபாநாயகர் முன்பே கிழிததார். ஆளுநர் உரையை கிழித்ததால்தான் திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார். ஆளுநர் உரையை கிழித்தது சரியா? என்ற கேள்விக்கு பதிலளித்த  அவர், அது சரியா தவறா என்று எனக்கு தெரியாது.

Image result for ஜெயலலிதா

ஆனால்  என்னுடைய உணர்ச்சியைத்தான் இப்படித்தான் காட்ட முடியும்.  நான் மட்டுமா சட்டமன்றத்தில் இதுபோன்று செயல்பட்டேன். உங்கள் கட்சி தலைவி ஜெயலலிதா தான் முதலில் பட்ஜெட்டையே கிழித்துப் போட்டார்.அவர், எங்கள்  கலைஞருக்கு முன்பு பட்ஜெட்டை நகலை கிழித்து போடவில்லையா? அது மட்டும் உங்களுக்கு நியாயமா? ஆளுநர் உரை குறித்து பேச அனுமதிக்கவில்லை. அப்படியென்றால் ஆளுநர் உரை எனக்கு எதற்கு? அதனால் நான் கிழித்துப்போட்டேன். இதற்கு முன் உதாரணம் உங்கள் கட்சி தலைவி  ஜெயலலிதா தான். அதைப்பார்த்துதான் நான் அந்த செயலை  செய்தேன். உங்கள் ஜெயலலிதா கிழித்ததால்தான் நானும் கிழித்தேன்.உங்கள் தலைவி  ஜெயலலிதா செய்தது சரி என்றால் நான் செய்ததும் சரியே. அவர் செய்தது தவறு என்றால், நான் செய்ததும்  தவறே என்று சற்று காட்டமாக பதிலளித்தார். இந்த விவகாரம் ஆண்ட மற்றும் ஆளும் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுட்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்