புதிய கால்நடை மருந்தகம் – நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு.!

Default Image
  • புதிய கால்நடை மருந்தகங்கள், கால்நடை மருத்துவமனைகள் மேம்பாடு ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்து கால்நடை பராமரிப்புத்துறை அரசாணை அறிவித்துள்ளது.
  • சுமார் 5000 கால்நடைகளுக்கு மேல் உள்ள 25 கிராம பஞ்சாயத்துகளில், புதிய கால்நடை மருந்தகங்கள் அமைக்க ரூ.3 கோடியே 50 லட்ச நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகங்களில் கூடுதல் வசதி இல்லாததாலும், குறைவான எண்ணிக்கையில் இருப்பதாலும், அதனால் சீரமைக்கும் பணி மற்றும் புதிய கால்நடை மருந்தகங்கள், ஏற்கனவே உள்ள கால்நடை மருந்தகங்களின் தரம் உயர்த்த, மேலும் கால்நடை மருத்துவமனைகள் மேம்பாடு ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்து கால்நடை பராமரிப்புத்துறை அரசாணை அறிவித்துள்ளது.

அதாவது, கால்நடை பராமரிப்புத்துறை அரசாணை அறிவிப்பில், கோவை, கடலூர், தருமபுரி, ஈரோடு, கரூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் சுமார் 5000 கால்நடைகளுக்கு மேல் உள்ள 25 கிராம பஞ்சாயத்துகளில், புதிய கால்நடை மருந்தகங்கள் அமைக்க ரூ.3 கோடியே 50 லட்ச நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 5 கால்நடை மருந்தகங்கள் தலா ரூ.50 லட்ச வீதம், ரூ.2 கோடியே 50 லட்ச மதிப்பீட்டில் கால்நடை மருத்துவமனைகளாக கூடுதல் தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி செட்டிபாளையம், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள 2 கால்நடை மருத்துவமனைகள், ரூ.2 கோடியே 40 லட்ச செலவில் 24 மணி நேரமும் இயங்கும் பன்முக மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்