தமிழ்நாட்டில் கூடுதலாக 3 மாவட்டத்தை சேர்க்க அரசு திட்டம்.? 37லிருந்து 40ஆக உயருமா.?

- தமிழகத்தில் 32 மாவட்டங்கள் இருந்தது எனில், கடந்த ஆண்டில் புதிதாக 5 மாவட்டங்கள் சேர்க்கப்பட்டு 37-ஆக அதிகரிக்கப்பட்டது.
- இந்நிலையில், தமிழக அரசு புதிதாக 3 மாவட்டங்களை நியமித்து 40 மாவட்டங்ககளாக உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 32 மாவட்டங்கள் இருந்தது எனில், கடந்த ஆண்டில் புதிதாக 5 மாவட்டங்கள் சேர்க்கப்பட்டு 37-ஆக அதிகரிக்கப்பட்டது. அதாவது செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, தென்காசி, பின்னர் பெரிய மாவட்டமாக இருந்த வேலூரை பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய இரு புதிய மாவட்டங்களாகவும் அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்பாக உருவான புதிய மாவட்டங்களுக்கு நிர்வாக பணியை தொடங்கி வைத்து பின்னர் ஆட்சியர், போலீஸ் அதிகாரிகளாக எஸ்பிக்களை தேர்தெடுக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசு புதிதாக 3 மாவட்டங்களை நியமிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது முதலமைச்சர் பழனிச்சாமி ஊரான எடப்பாடியை தனி மாவட்டமாக உருவாக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. மேலும் தமிழகத்தில் மாஸ்டர் என்றழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் இருந்து பொள்ளாச்சியையும், பின்பு தஞ்சாவூரை சேர்ந்த மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை இந்த ஆண்டிற்கான கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருவதால் , அதில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் 37 மாவட்டமாக இருந்த தமிழ்நாடு இந்த தகவல் முடிவினால் தமிழகத்தில் 40 மாவட்டங்களாக உயரும்.