இன்று இரண்டாவது போட்டி.!தொடரை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி .!
- நேற்று முன்தினம் முதல் போட்டி பந்து வீசாமல் போட்டி ரத்து என அறிவிக்கப்பட்டது.
- இன்று 2-வது போட்டி மத்தியபிரதேசத்தில் உள்ள இந்தூரில் நடைபெற உள்ளது.
இலங்கை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட வந்து உள்ளனர்.இந்த தொடரின் முதல் நேற்று முன்தினம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற இருந்தது. போட்டிக்காக “டாஸ்” போடப்பட்டு இந்திய அணி பந்து வீச முடிவு செய்தது.
ஆனால் போட்டி துவங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் மழை பெய்ய தொடங்கியது. இதனால் போட்டி தாமதமாக தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.ஆனால் மைதானத்தில் இருந்த ஈரப்பதம் காரணமாக போட்டி பந்து வீசாமல் போட்டி ரத்து என அறிவிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து இன்று 2-வது போட்டி மத்தியபிரதேசத்தில் உள்ள இந்தூரில் நடைபெற உள்ளது.இந்த போட்டியில் தொடரை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்ற முனைப்புடன் இரு அணிகளும் உள்ளது.காயத்தில் இருந்து மீண்டு வந்து உள்ள தவான், வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோரின் செயல்பாடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.